தமிழ்ராக்கர்ஸ் குழுவிற்கு இதயம் இருக்கிறதா..? விக்னேஷ் சிவன் கேள்வி..!

Report
123Shares

24 மற்றும் சிங்கம் 3 படத்திற்கு பிறகு சூர்யா நடித்து வெளியாகியிருக்கும் படம் தான் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், பாலாஜி நடிப்பில் வெளியான இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிரூத்.

இப்படத்தின் சிங்கள் ட்ராக் மற்றும் ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனால் படத்தின் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகவும் அதிகரித்தே காணப்பட்டது. சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக திரையில் ஒன்றாக நடிக்கிறார்கள்.

மேலும், இந்த படத்தின் கதை 80-களை ஒட்டி பயணிக்கும் என்று கூறப்பட்டது. இந்த படம் பாலிவுட் சினிமாவில் அக்ஷய்குமார் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் தான்.

இந்த படத்திற்கு தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்காக விக்னேஷ் சிவன் அவரது ட்விட்டர் பக்கம் மூலம் "தமிழ்ராக்கர்ஸ் குழுவிற்கு இதயம் என்று.., ஒன்று இருந்தால் தயவு செய்து இந்த பொங்கலுக்கு வெளியாகும் தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் மற்றும் குலேபகாவலி படங்களை உங்களது இணையத்தில் வெளியிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

4226 total views