விபத்தில் சிக்கியவருக்கு இரண்டாம் வாய்ப்பு தந்த மம்முட்டி

Report
52Shares

நடிகர் திலீப்பின் நண்பர் நாதிர்ஷா இயக்கிய 'கட்டப்பனையிலே ஹ்ரித்திக் ரோஷன்' படம் மூலம் ஹீரோவாக மாறியவர் விஷ்ணு உன்னிகிருஷ்ணன்.

ஏற்கனவே சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டி வந்த இவர், அடிப்படையில் கதாசிரியர் என்பதும், தான் ஹீரோவாக நடித்த படத்திற்கும், பிருத்விராஜின் 'அமர் அக்பர் அந்தோணி படத்திற்கும் கதை எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது மம்முட்டி கதாநாயகனாக, முதலமைச்சர் கேரக்டரில் நடிக்க உள்ள புதிய படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், இவர் இதற்கு முன்னதாக மம்முட்டியின் 'ஸ்ட்ரீட்லைட்ஸ்' படத்திலேயே நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.ஆனால் அந்தப்படத்தின் படப்பிடிப்பின்போது ஆரம்ப நாட்களிலேயே விபத்தில் சிக்கவே, அதில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்க முடியாமல் போனது.

அதனாலேயே இந்தப்படத்திற்குள் அவரை சேர்க்க சொல்லி இயக்குனருக்கு அன்புக்கட்டளை போட்டுவிட்டாராம் மம்முட்டி.

1992 total views