ஹன்சிகாவின் கதாபாத்திரத்தை கேட்டால் அப்படியே ஷாக் ஆகிடுவீங்க

Report
179Shares

குலேபகாவலி படத்தில் ஹன்சிகாவின் கதாபாத்திரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்துள்ள குலேபகாவலி படம் பொங்கல் ஸ்பெஷலாக நாளை ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை ஹன்சிகா பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.

எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி பயணக் கதை. அதை போன்றே நான் எடுத்துள்ள படமும் பயணக் கதை என்பதால் குலேபகாவலி என்று பெயர் வைத்துள்ளோம். மற்றபடி இரண்டு படங்களுக்கும் இடையே எந்த ஒற்றுமையும் இல்லை.

பிரபுதேவா, ஹன்சிகா, முனீஸ்காந்த் ஆகியோர் புதையல் ஒன்றை தேடிச் செல்வார்கள். அதே புதையலை வில்லன்களும் தேடுவார்கள். ரேவதி ஒரு குழந்தையை தொலைத்துவிட்டு தேடுவார்.

கதையை கேட்டதும் நடிக்க ஒப்புக் கொண்டார் ஹன்சிகா. அவர் பப் டான்ஸராக நடித்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த பிரபுதேவாவை இந்த படத்தில் பார்ப்பீர்கள் என்றார் கல்யாண்.

குலேபகாவலி படத்தில் என் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானது. அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இதுவரை நான் நடித்திராத கதாபாத்திரம் என்று ஹன்சிகா சொன்னது பப் டான்ஸர் கதாபாத்திரத்தை தான்.

7806 total views