மீண்டும் பத்மாவதி படத்திற்கு ஏற்பட்ட தடை

Report
25Shares

பாலிவுட் இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கிய பத்மாவதி (தற்போது பத்மாவத்) படத்துக்கு படப்பிடிப்பு காலத்திலிருந்தே தொடர்ந்து பிரச்னைகள் உருவாகி வருகின்றன.

ராஜபுதனத்து அரசியான பத்மாவதியை படம் தவறாக சித்தரிப்பதாக கூறி 4 மாநில அரசுகள் படத்தை தங்கள் மாநிலத்தில் திரையிட மாட்டோம் என்று அறிவித்தன. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம், பல காட்சிகள் மாற்றி அமைப்பு, 26 இடத்தில் கட் என படத்தை சிதைத்த சின்னாபின்னமாக்கி தணிக்கை குழு யுஏ சான்றிதழுடன் வெளியிட அனுமதி வழங்கி உள்ளது.

விட்டால் போதும், முதலீடு செய்யப்பட்டிருக்கும் பல கோடி ரூபாய் திரும்ப வேண்டும் என்பதற்காக எந்த மறுப்பும் சொல்லாமல் படத்தின் பெயர் மாற்றம் உள்பட எல்லாவற்றுக்கும் சம்மதம் தெரிவித்தனர் தயாரிப்பாரும், இயக்குனரும். இதைத் தொடர்ந்து படம் வருகிற 26ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

.இந்த நிலையில் படத்தை வெளிவர விடமாட்டோம் என்று ராஷ்ட்ரிய கர்னி சேவா அமைப்பு அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி படத்தை ராஜஸ்தானில் திரையிட மாட்டோம் என்று அந்த மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறும்போது "பத்மாவதி பட பிரச்னையை மக்களின் உணர்வாக அரசு பார்க்கிறது. எனவே ராஜஸ்தனில் படம் வெளியாகாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சரிடம் பேசியிருக்கிறேன். ராணி பத்மவாதியின் தியாகம் எங்கள் மாநிலத்தின் மிகப்பெரிய கவுரவம். அதனை களங்கப்படுத்த ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்" என்கிறார் முதல்வர்.

1845 total views