நவம்பர் 24-ஆம் திகதி நமீதாவுக்கு திருமணம்!!

Report
243Shares

தமிழ் திரையுலகின் பல்வேறு படங்களில் நடித்த நமீதாவுக்கும், வீராவுக்கும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நமீதா. அதனைத் தொடர்ந்து 'ஏய்', 'இங்கிலீஷ்காரன்', 'சாணக்யா', 'கோவை பிரதர்ஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக 2016-ம் ஆண்டு 'இளமை ஊஞ்சல்' படத்தில் நடித்திருந்தார். விரைவில் பரத்துடன் இவர் நடித்துள்ள 'பொட்டு' வெளியாகவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பு, சில காலம் ஓய்வில் இருந்து வந்தார் நமீதா

தற்போது 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் "நமீதா மற்றும் வீர் இருவரும் திருமணம் செய்யவுள்ளார்கள். இதை அறிவிப்பதில் சந்தோஷப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

10252 total views