ஓவியாவின் புகழை பார்த்து பொறாமைப்பட்டேன்…! உண்மையை சொன்ன வையாபுரி…!!

Report
542Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை முடிவடைந்தது. இதில் கலந்து கொண்டவர்களில் சிலர் பெரும் புகழ் அடைந்தவர். சிலருக்கு எதிர்மறையான பிம்பம் கிடைத்தது. ஓவியாவுக்கு கிடைத்த பேரும், புகழும் மற்ற யாரும் எதிர்பாராத ஒன்று.

முக்கியமாக மற்ற போட்டியாளர்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் ஓவியா இருந்தபோது மற்ற போட்டியாளர்களுக்கு கிடைக்கவில்லை. வெளியில் ஏகோபித்த வரவேற்பு இருந்தது.

இது குறித்து வையாபுரி கூறும்போது, பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நான் ஓவியாவை பார்த்து பொறாமப்பட்டேன்.

ஏனென்றால் ஓவியா பெயரை சொன்னாலே போதும் ரசிகர்களின் கைதட்டல், கரகோஷம் அரங்கம் அதிரும் அளவுக்கு இருக்கும்.

சில நேரங்களில் என் பெயரை சொல்லும்போது கூட கைதட்டல் கிடைத்தது. கமல் சார் சொல்லும்போது உங்களுக்குத்தான் இந்த கைதட்டல் என்று கூறுவார். அப்போது அது எனக்கு பெருமையாக இருக்கும் என்றார்.

21913 total views