என்னுடைய நடிப்பை நானே பார்க்க மாட்டேன்: அண்ரியா

Report
155Shares

தான் நடித்த “அவள்” திரைப்படத்தை தானே பார்க்க மாட்டேன் என அந்தத் திரைப்படத்தின் நாயகி அண்ரியா தெரிவித்துள்ளார்.

மிலிண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் அண்ரியாவின் நடிப்பில் உருவாகி வரும் “அவள்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “வித்தியாசமான கதைகள் தான் என்னைத் தேடி வருகிறது. அப்படி வரும் போது எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது. ஆனாலும், அதன் மூலம் பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டு வருகிறேன்.

பெரும்பாலும் எனக்கு பயமாக இருக்கும் திரைப்படங்களை நான் பார்ப்பதில்லை. பயப்படும் அளவிற்கு இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இதுவரை இதுபோன்ற திரைப்படங்கள் வந்ததில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

7161 total views