முதியவரை முதுகில் தூக்கி வீதியை கடக்க உதவிய பொலிஸ் அதிகாரி ; வைரலாகும் காணொளி

Report
110Shares

சீனாவில் வீதியைக் கடக்க தடுமாறிய முதியவரை வீதியில் போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸார் ஒருவர் தனது முதுகில் தூக்கிக்கொண்டு வீதியை முதியவர் கடக்க உதவிய காணொளியொன்று இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சீனாவின் சிக்குவான் மாகாணத்தில் உள்ள வீதியொன்றிலேயே முதியவர் ஒருவர் வீதியைக் கடக்க முயன்றார். இரண்டு ஊன்றுகோல்களின் உதவியால் பாதசாரிகள் கடவையில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாதசாரிகள் கடவையில் சிவப்புநிற விளக்கு அணைந்து பச்சை விளக்கு எரிய ஆரம்பித்ததால் வாகனங்கள் வர தொடங்கின.

அப்பகுதியில் போக்குவரத்துக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்த சம்பவத்தை அவதானித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துப் பொலிஸார் முதியவரை தனது முதுகில் ஏற்றி சாலையை கடக்க உதவினார்.

இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனை பார்த்த அனைவரும் குறித்த பொலிஸ் அதிகாரியை பாராட்டி வருகின்றனர்.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்நிலையில் சீனாவின் போக்குவரத்துத்துறை குறித்த காணொளியை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5066 total views