பிரபல சானலை விட்டு விலகிப்போன பிரபல காமெடி நடிகை! நடந்தது என்ன

Report
603Shares

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்த காமெடி நடிகை தேவதர்ஷினி. அவரின் அசைவுகளையும். இயல்பாக சிரிக்க வைக்கும் நடிப்பை யாராலும் மறக்க முடியாது.

காஞ்சனா படத்தில் பேயை பார்த்து இவர் படும் பாடு இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது. பல படங்களில் துணை நடிகையாகவும் நடித்து வருகிறார்.

அதே நேரத்தில் நீண்ட காலமாக அவர் முக்கிய தொலைக்காட்சி ஒன்றில் சண்டே கலாட்டா என்ற காமெடி நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அவருடன் காமெடி பிரபலம் மதுரை முத்துவும் நடித்து வருகிறார்.

ஞாயிற்றுகிழமை ஆனாலே பலருக்கும் இந்த நிகழ்ச்சி தான் முக்கிய டைம் பாஸிங். ஆனால் அவர்களுக்கெல்லாம் இப்போது அதிர்ச்சியான செய்தி. ஆம்.

தேவதர்ஷினி இவர் தற்போது அதை விட்டு விலகி வேறு சானல் பக்கம் சென்று விட்டாராம். காரணம் அந்த டிவி நிர்வாகத்தார் கடந்த 6 வருடங்களாக நடக்கும் இந்த நிகழ்ச்சி முன்பு போல இல்லை என்று கூறியதாலும், புதுமையாக எதையாவது செய்யலாமே என முடிவெடுத்து தான் மாறிவிட்டாராம்.

எனவே இனி தேவதர்ஷினியை அந்த காமெடி ஷோவில் பார்க்க முடியாது என்பது சோகம் தான்.

21474 total views