ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு

Report
634Shares

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாரிக்கப்படவுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.

ஸ்ரீதேவியிடமும் அவரது கணவர் போனிகபூரிடமும் இதற்கு அனுமதி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 5 பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாரிக்கப்படவுள்ளது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உள்பட அனைத்து மொழி நடிகர்- நடிகைகள் ஸ்ரீதேவி பற்றிப் பாராட்டி பேசும் கருத்துகளும் படத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீதேவி படங்களில் பணியாற்றிய இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஸ்ரீதேவி குடும்பத்தினரதும் கருத்துக்களும் படத்தில் இடம்பெறுகிறது.

ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கை, சாதனைகள், வாங்கிய விருதுகள், குடும்பம் உள்ளிட்ட விடயங்கள் இந்த படத்தில் இடம்பெறுகிறது.

ஸ்ரீதேவி தனது 4 வயதிலேயே எம்.ஏ.திருமுகம் இயக்கிய துணைவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் கதாநாயகியானார். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் நடித்துள்ளார்.

மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், பிரியா, கல்யாணராமன், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, நான் அடிமையில்லை உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் இந்திப் படத் தயாரிப்பாளர் போனி கபூரைத் திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

19345 total views