மறுப்பு தெரிவித்ததற்காக கொடூரமாக கொலை செயப்பட்ட இளம் நடிகை!

Report
52Shares

சினிமா பிரபலங்களுக்கும் சில எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அப்படி ஒரு சம்பவம் பாகிஸ்தானில் ஒரு இளம் பாடகிக்கு நடந்துள்ளது.

அவரின் பெயர் சும்புல் கான். சானல்களில் நடித்தும், இசை நிகழ்ச்சி நடத்தியும் வருகிறார். அவருக்கு வயது 25. மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை தங்கள் பார்டியில் பாடச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள்.

பலமுறை அவர்கள் சொல்லியும் அந்த பாடகி சம்மதம் தெரிவிக்கவில்லையாம். இதனால் அந்த கும்பல் அங்கேயே அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்றுள்ளது.

தப்பி ஓடிய மூவரில் ஒருவர் போலிஸில் பிடிப்பட்டுள்ளார். இதில் அந்த நபர் முன்னாள் காவல் துறை அதிகாரி என்பது தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

2444 total views