அந்த வார்த்தையை கூறியது சரி தான்-ஜோதிகா

Report
109Shares

பிரபல தமிழ் சினிமா குடும்பத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டவர் நடிகை ஜோதிகா, இவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே சிவகுமாரின் மகன் மற்றும் நடிகருமான சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தததும் இனி நடிக்கமாட்டேன் என்று கூறிய ஜோதிகா, 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் திரைக்கு வந்தார்.

இந்த படத்தில் குடும்ப பெண்ணாக நடித்த இவருக்கு மீண்டும் பல ரசிகர்கள் கூடினார்கள். அதுவும் பெண் ரசிகர்கள் தான் அதிகம். இவர் தற்போது நாச்சியார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இயக்குனர் பாலா. பாலா எடுக்கும் படம் என்றால் அது வேற விதமாக தான் இருக்கும்.

அந்த வகையில் ஜோதிகா இந்த படத்தின் பெண்களை இழிவு படுத்தும் வார்த்தைகளை பேசுவார். அப்படி பேசி வெளியான இப்படத்தின் டீசர் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பை சந்தித்தது.

படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிப்ரவரி-9 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து அன்று வாய் திறக்காத ஜோதிகா, திடீரெண்டு படம் ரிலீஸாகும் இந்த தருணத்தில் பேசியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது: நாச்சியார் படத்தில் அந்த வார்த்தையை நான் கூற காரணம் நான் நடித்துள்ள கதாபாத்திரம் தான். அந்த கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் இதை விட மோசமான வார்த்தைகளை பயன்படுத்தவேண்டி இருந்திருக்கும். நான் என்பதால் மிகவும் குறைத்தே பேசியிருக்கேன்.

இந்த வார்த்தையை பல படங்களில் பல ஹீரோக்கள் கூறி நாம் கேட்டிருப்போம். ஆனால் அப்போது எழும்பாத இந்த சர்ச்சைகள் என்னை போல் ஒரு பெண் பேசினால் மட்டும் ஏன் வருகிறது என்று தெரியவில்லை, என்று கூறினார் ஜோதிகா.

4454 total views