என் கணவர் என்னிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறார்..!

Report
213Shares

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, அசல், தீபாவளி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். இவருக்கும் கன்னட படத்தயாரிப்பாளரான நவீனுக்கும் காதல் மலர்ந்தது.

5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் கடந்த மாதம் 22-ந்தேதி கொச்சியில் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு சில நாட்கள் கணவர் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பாவனா, மீண்டும் சினிமாவுக்கு திரும்பி உள்ளார். இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் ”

சினிமாவில் நல்ல வேடங்கள் கிடைக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன். சினிமாவை விட்டு விலகும் எண்ணம் எதுவும் இல்லை.என் கணவரும் இதை தான் என்னிடம் எதிர்பார்க்கிறார் என்று கூறினார்.

9649 total views