சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

Report
500Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் வெகு பிரபலம் ஆனவர்கள் இரண்டு பேர்தான். ஒருவர் நடிகை ஓவியா. மற்றொருவர் ஜூலி. இருவருக்குமே சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

ஜூலி நடித்த அப்பள விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது மட்டும் அல்லாமல் உத்தமி என்ற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, இந்த கதையை கேட்டவுடன் எனக்கு பிடித்து விட்டது. இந்த படம் எனக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். கதாபாத்திரத்திற்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்று கூறி இருந்தார்.

இந்த வார்த்தையை அப்படியே சமூக வலைதளங்களில் சிலர் மாற்றி நிர்வாணமாக கூட நடிப்பேன் என கூறியதாக போட்டு விட்டார்கள்.

இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஜூலி எப்படிப்பட்டவராக கூட இருக்கலாம்.

அதற்காக அவரை பற்றி இப்படியா போடுவது. அவரும் பெண்தான் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது என ஜூலிக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

22959 total views