ஓவியா, சிம்பு ரகசிய திருமணம் குறித்து சிம்பு கூறிய உண்மை தகவல்..!

Report
341Shares

தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளை அடிக்கடி சந்திப்பவர் என்று பட்டியல் எடுத்தால் அதில் முதலில் நடிகர் சிம்புவின் பெயர் தான் வரும். கடைசியாக AAA பட தயாரிப்பாளருடன் சர்ச்சையில் சிக்கிய சிம்பு இனி நடிக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடித்துவருகிறார்.

பல அக்ரீமெண்ட்களில் கையெழுத்திட்டு நடித்துக்கொண்டிருக்கும் அவர் ஆங்கிலத்தில் ஒரு படம் தயாரித்து வருகிறார்.

அந்த படத்தின் படம்பிடிக்கும் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது தனி ஒருவன், வேலைக்காரன் என சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தான் சிம்பு, நடிகை ஓவியாவுடன் இணைந்து புத்தாண்டிற்கு புதிய பாடல் வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவும் மிக பெரிய ஹிட் அடித்தது. அதைத்தொடரந்து, நெட்டிசன்கள் சிம்பு மற்றும் ஓவியாவை இணைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டது.

நயன்தாரா மற்றும் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தின் திருமண புகைப்படத்தில் ஓவியா முகத்தை மாற்றி மார்பிங் செய்து வெளியிட்டு ஓவியா மற்றும் சிம்பு ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகளை பரவ செய்தனர்.

இதுகுறித்து அறிந்த நடிகர் சிம்பு தற்போதும் மிகவும் கோபத்தில் உள்ளாராம். இதை செய்தது யார் என்று கண்டுபிடிக்க முயற்சிகள் போய்க்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

12157 total views