கோஹ்லிக்கும் அனுஷ்காவுக்கும் டும்டும்மா!!

Report
313Shares

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது காதலியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவை இன்னும் சில நாட்களில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீண்ட கால காதலர்களான இருவரும், இத்தாலியில் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா வென்றுள்ள நிலையில், T20 தொடரில் கப்டன் கோஹ்லிக்கு லீவு கொடுக்கப்பட்டிருந்தது. ஓய்வுக்காகவே இவ்வாறு அவர் விலகியுள்ளார் என கூறப்பட்ட நிலையிலேயே, கோஹ்லி திருமணத்திற்காக பிரேக் எடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அனுஷ்கா ஷர்மாவுடன், கோஹ்லி விரைவாக இத்தாலி செல்ல உள்ளதாகவும், அங்கு பிரமாண்டமாக திருமணம் நடைபெற உள்ளதாகவும் கோஹ்லியின் நட்புக்கள் ஊடாக ஊடகங்களுக்கு சில செய்திகள் கசிந்துள்ளன

இத்தாலி திருமண நிகழ்வில் பங்கேற்க கோஹ்லியின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தாலி நாட்டிலுள்ள மிலன் நகரில் திருமண வைபோகம் நிகழ உள்ளது.

இந்த மாதம் திருமணம் தொடர்பான விழாக்களில் பிஸியாக இருக்கப்போகும் கோஹ்லி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் உத்வேகத்தோடு, பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

10943 total views