ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷால், தீபா வேட்பு மனு நிராகரிப்பு

Report
94Shares

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். விஷாலின் வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் இம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

இந்தநிலையிலேயே விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். போலி கையெழுத்துகளுடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததால் விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை பாய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

அதேவேளை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனுவும் தேர்தல் அதிகாரிகளால் பல படிவங்கள் நிரப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3777 total views