சிவாஜி பேரனுக்கு இந்த படமாவது கை கோடுக்குமா?

Report
193Shares

தமிழ் சினிமா குடும்பம் என்றால் முதலில் மனதில் வருவது நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் குடும்பம் தான்.

அவருக்கு 80களில் இருந்த ரசிகர்களுக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு மக்கள் அன்பை சம்பாரித்து வைத்தவர் அவர்.

இவரின் வாரிசு தான் பிரபு என்ன தான் உடல் பருமனாக இருந்தாலும் இவரின் நடிப்பால் பலர் மனதை கொள்ளை கொண்டவர்.

இவர் குஷ்பு அவர்களுடன் சேர்ந்து நடித்த பல படங்கள் மிக பெரிய ஹிட் அடித்தது.

மேலும் இவரின் வாரிசாக சினிமா துறைக்கு வந்தவர் விக்ரம் பிரபு.

இவரின் கும்கி உள்ளிட்ட சில படங்கள் மிக பெரிய ஹிட் கொடுத்தது. ஆனால் இவர் தற்போது நடித்து வெளியிடும் அனைத்து படமுமே தோல்வியாக தான் அமைகிறது.

இருந்தாலும் தற்போது, தாணு தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் இவர்.

இப்படத்திற்கு, துப்பாக்கி முனை என, பெயர் வைத்துள்ளனர்.

தினேஷ் செல்வராஜ் இயக்கும் இப்படத்தில், போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு நடிக்கிறார்.

ஆக் ஷன் பாணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் துவங்குகிறது.

7107 total views