அடிப்படை உரிமையை இழந்தாா் பிரியங்கா சோப்ரா!

Report
177Shares

உத்தரபிரதேசத்தில் உள்ள பரேலி தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயரை நீக்குமாறு உத்தரபிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர்.

இராணுவத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்த அவரது தந்தை அசோக் சோப்ராவின் பணிநிமித்தம், பிரியங்காவின் குடும்பம் டெல்லி, சண்டிகார், புனே உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடம்பெயர்ந்தது.

கடந்த 2000ஆம் ஆண்டில் பிரியங்கா சோப்ரா ‘உலக அழகி’ பட்டம் வென்றபோது, அவர்களது குடும்பம் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் வசித்தது.

இதனால், பரேலியின் 56ஆவது வார்டில் அவர்களுக்கு வாக்குரிமை இருந்தது. பின்னர் பிரியங்கா சோப்ரா குடும்பத்தினருடன் மும்பையில் குடியேறினார். இதனால் தேர்தல் நேரங்களில் அவர்கள் பரேலிக்கு சென்று வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே அவர்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கோரி, உள்ளூர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த உத்தரபிரதேச நீதிமன்றத்தின் நீதிபதி ஆர்.விக்ரம் சிங், பரேலி வாக்காளர் பட்டியலில் இருந்து, பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது தாயார் மது சோப்ராவின் பெயர்களை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

7473 total views