வெளியாகும் அனுஷ்காவின் ‘பாகமதி’!

Report
142Shares

’பாகுபலி’ படத்துக்குப் பின் நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் ‘பாகமதி’ மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்தப் படம் மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ஆதி பினிசெட்டி, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். படத்தை யுவி க்ரியேஷன்ஸ் நிறுவனம் 25 கோடி ரூபாய் செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.

அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் அனுஷ்கா நடிப்பில் ‘பாகுபலி 2’ வெளியானது. கிட்டத்தட்ட 9 மாதங்கள் கழித்து ‘பாக்மதி ’படம் வெளியாக இருக்கிறது. ‘பாகுபலி’க்குப் பின் வெளியாகும் படம் என்பதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

5963 total views