வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார் ரம்யா!

Report
154Shares

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா ’சங்க தலைவன்’ என்னும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரம்யா பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாக மக்களிடையே பிரபலமானார்.

இந்நிலையில், ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையிலும் தனது நடிப்புத்திறமையை நிரூபித்தார்.​ சமீபத்தில் பவர் லிப்டிங் போட்டியில் கலந்து கொண்டு இரட்டைத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

வெற்றி மாறன் இயக்கத்தில் , இயக்குநர் சமுத்திரகனி நடிக்கும், ‘சங்க தலைவன்’ என்னும் படத்தில் ரம்யாமுக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் கைத்தறி நெசவாளர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

6253 total views