மனோரமா கோவை சரளா! மனதை உருக்கும் சோகமான பின்னணி

Report
226Shares

பேராண்டி’ படத்தில் மனோரமா நடிக்க வேண்டிய பாட்டி வேடத்தில் நடிகை கோவை சரளா நடிக்கவுள்ளார்.

மறைந்த நடிகை மனோரமா இறப்பதற்கு முன்பு நடிக்க ஒப்புக் கொண்ட படம் ‘பேராண்டி’. இந்தப் படத்தில் பாட்டி கேரக்டரில் நடிக்க இருந்தார் ஆச்சி மனோரமா.

மேலும் இந்தப் படத்திற்காக தனது குரலில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். அதையடுத்து போட்டோ சூட்டும் நடந்தது. ஆனால் படப்பிடிப்பு நடக்கயிருந்தபோது மனோரமா இறந்து விட்டார்.

அதனால் ‘பேராண்டி’ படத்தில் மனோரமா நடிக்கயிருந்த கேரக்டரில் கோவை சரளா நடித்து வருகிறார்.

ஏற்கனவே கார்த்தி நடித்த ‘கொம்பன்’ படத்திலேயே மனோரமா பாணியில் குணசித்ர நடிகையாக வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கிய கோவை சரளா, இந்த பேராண்டி படத்தில் காமெடியில் இருந்து விடுபட்டு, காமெடி கலந்த குணசித்ர வேடத்தில் மனோரமா பாணியில் நடித்து வருகிறார். மேலும், மனோரமா பாடிய பாடல் இந்தப் படத்தில் பயன்படுத்தப்படுகிறது.

8971 total views