ஒரே நாளில் பிரபலமான ஜிமிக்கி கம்மல் ஷெரில் யாருடைய ரசிகை தெரியுமா? ஓபன் டாக்

Report
192Shares

சமூக வலைதளங்கள் முழுக்க மட்டுமல்லாது இளைஞர்களின் மனதிலும் 1000 வாட்ஸ் பல்பு போல பிரகாசமாக எரிகிறது ஜிமிக்கி கம்மலின் வெளிச்சம். ஓணம் பண்டிகைக்காக மலையாள சினிமா பாடலான எண்ட்டமேட ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஷெரில் அது வைரலானது பற்றி மனம் திறந்துள்ளார் .

பேசிக்கலி நான் ஒரு டான்ஸ் டான்சர். இதுக்கு முன்னால வரைக்கும் ஒரு ஸ்டூடண்டா தான் டான்ஸ் ஆடியிருக்கேன், இந்த மாதிரி வீடியோ வந்தது இது தான் முதல் தடவை. இப்படி வைரலாகும்னு நினைச்சு கூட பார்க்கல. பயங்கர சந்தோசமா இருக்கு. நீங்க பார்த்த அந்த வீடியோல ஆடுனது ஸ்டூடன்ஸ், டீச்சர்கள் தான்.

டீச்சர்ஸ் டே வேற வந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் இருவருக்கு இடைல இருக்கிற உறவு ஸ்டார்ங்கா இருக்கனும். அதுக்காக தான் செஞ்சோம். வீடியோ பார்த்து நிறைய பேர் மலையாள சினிமால இருந்து கால் பண்ணாங்க. நடிக்கனும் கேட்டாங்க. ஆனா அது பற்றி எந்த முடிவும் எடுக்கல.

நடிக்கனும்னு ஆசைதான். ஆனா வீட்ல ஏத்துக்கனுமே. சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தை சூர்யாவுக்காகவே பல முறை பார்த்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

8512 total views