ஜூலிக்கு புதிய வில்லியாக அவதாரம் எடுத்தார் நமீதா..!

Report
367Shares

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதலே ஜல்லிக்கட்டு ஜூலியை மையப்படுத்தியே நகர்ந்து வருகிறது. அவரும் அழுது புரண்டு அங்கிருப்பவர்களை சமாளித்து ஒரு வழியாக 2 வாரங்களை கடந்து விட்டார்.

அவரை காயத்ரியும், ஆர்த்தியும் படாதபாடு படுத்தி வந்தனர். அவர்கள் தற்போது பெயர் கெட்டு என கருதி ஜூலியை விட்டு சற்று ஒதுங்கியே இருக்கின்றனர்.

இனிமேல் பிரச்னை இல்லை என நினைத்தவருக்கு நமீதா மூலம் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியின்போது கார்டனில் கணேஷ், ஆர்த்தி மற்றும் ரைசாவுடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது ஜூலியின் கேரக்டர் பழையபடி பயங்கர கேவலமாக மாறிடுச்சி. பரணியை எப்படி நாம் எப்படி வீட்டை விட்டு துரத்தினோமோ அதுபோலத்தான் ஜூலியையும் துரத்த வேண்டும் என்கிறார். நீ கேடின்னா நான் மகா கேடின்னு ஜூலிக்கே சவால் விடுகிறார்.

இதுவரை நிகழ்ச்சியில் எதிலும் பங்கு கொள்ளாமல் இருந்த நமீதா தற்போது களத்தில் குதித்து விட்டார். அதோடு ஜூலிக்கு புதிய வில்லியாக மாறி விட்டார்.

12251 total views