போதை பொருள் விவகாரம்.. சிக்கும் தமிழ் நடிகைகள்.. திடுக்கிடும் தகவல்

Report
115Shares

போதை பொருள் கடத்தல் விவகாரம் ஆந்திர மாநிலத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் முன்னணி கதாநாயகிகள் இதில் சிக்கியுள்ளனர்.

தீவிர ஆலோசனைக்கு பிறகு ஆந்திர போலீசார் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக சில நடிகர், நடிகைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதற்கு சில நடிகர், நடிகைகள் மறுப்புதெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தின் பின்னணியில் பெரும் தொழில்முதலைகள் இருக்கிறார்களா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

போதை பொருள் சந்தை என்பது சட்டவிரோதமாக அனைத்து இடங்களிலும் மிக வெளிப்படையாக சில அதிகார மையங்களின் துணையோடு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த விவகாரத்தின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

5656 total views