காயத்ரியின் இழிவான செயலுக்கு, அவரது தாயாருக்கு கிடைத்த மரியாதை..!

Report
910Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரி பிஹேவியர் என்று பேசிய காயத்ரியின் பேச்சிற்கு தாய் கிரிஜா ரகுராம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை, காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என்று இழிவாக பேசினார்.

அந்தக் காட்சி பிரமோவாக ஒளிப்பரப்பானது. இதற்கு கடும் கண்டனம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்தது.

தலித் சமூகத்தை இழிவாக பேசிய காயத்ரி மீது வழக்கு தொடர வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது.

இந்நிலையில், இன்று அவரது தாய் கிரிஜா ரகுராம், சேரி தொடர்பான காயத்ரி பேசிய வார்த்தைகள் மக்களை பாதித்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், காயத்ரியை யாரும் கேவலப்படுத்த வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

40225 total views