காதல் பட காமெடி நடிகர் ஒரு வேளை சாப்பாட்டிற்காக சாலையில் பிச்சை எடுக்கும் அவலம்..!!

Report
626Shares

நடிகர் பரத் நடித்த காதல் படத்தில் விருச்சகாந்த் என்ற கேரக்டரில் நடித்தவர் பல்லு பாபு. காதல் படத்திற்கு பிறகு அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை, படவாய்ப்புக்காக தயாரிப்பாளர்கள், இயக்குனர் இல்லத்திற்கு நடையாய் நடந்தும் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை,

சென்னையில் தங்கி இருந்த அறைக்கு வாடகை கொடுக்க முடியமால் அடுத்த வேளை சாப்பாட்டிற்காக அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் அவரது தாய், தந்தை இறந்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

அடுத்த வேளை சாப்பாட்டிற்காக சென்னை சூளை கோவிலில் பிச்சை எடுத்து வருகிறார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் பல்லு பாபு மனநிலை பாதிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து மனநல மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தனர்.

இவர் சினிமாவில் பேசிய முதல் வசனம் நடிச்சா ஹீரோ சார்… நான் வெய்ட் பன்றேன்.. முதல்ல சினிமா,, அப்புறம் அரசியல்.. அப்புறம் பி.எம். என பேசி இருப்பார் அதனால் என்னவே அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை ஒரு காட்சியில் நடித்தாலும் நச் என்று நடித்து இருப்பார்..

25953 total views