என்னை இயக்குனர் அதற்கு அழைத்தார் நம்பி சென்றேன்..

Report
2656Shares

இயக்குனர் சமுத்திர கனி இயக்கி நடித்த ‘தொண்டன்’ படத்தில் அவருடைய தங்கையாக நடித்தவர் அர்த்தனா. தற்போது அந்த படம் வெளியான பிறகு அவருக்கு பிறபடங்களில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் அவரை தேடி வருகிறது.

புதிய பட வாய்ப்புகள் குறித்து நடிகை அர்த்தனா கூறுகையில் “முதல் படத்தில் தங்கையாக நடித்து விட்டதால் உங்களுக்கு அக்கா, தங்கை ரோல் தான் கிடைக்கும் என சிலர் வருத்தத்துடன் பலர் கேட்டனர்.

சமுத்திரகனி சார் படம் என்பதால் கதையை கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டேன். தொண்டன்’ படப்பிடிப்பு முன்பு இயக்குனர் சமுத்திரகனி ‘என் கதாபாத்திரம் குறித்து சொல்லுங்கள் நான் என்னை தயார் செய்து கொள்கிறேன் என கேட்ட போது அவர் ‘ என்தங்கை நல்ல மங்கை’ என தெரிவித்தார்.

உண்மையான வாழ்க்கையில் செய்ய முடியாததை அவரது தங்கை பாத்திரத்தின் மூலம் செய்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது 2 படங்களில் கதாநாயகியாக நடிக்க உள்ளேன். நல்ல கதை, நல்ல கேரக்டர் கிடைத்தால் எந்த பாத்திரத்திலும் நடிப்பேன். மற்றப்படி பிடிவாதம் செய்ய மாட்டேன்” என தெரிவித்தார்.

104174 total views