இனி இது மட்டும்தான்..! – பூனம் பாஜ்வா அதிரடி முடிவு

Report
267Shares

ஜெயம்ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படத்தில் கிளாமரான ஒரு கேரக்டரில் நடித்த பூனம் பாஜ்வா, அதன்பிறகு சுந்தர்.சியுடன் முத்தின கத்தரிக்கா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து சுந்தர்.சியின் அரண்மனை-2 படத்திலும் நடித்தார். தற்போது நடன மாஸ்டர் பாபா பாஸ்கர் இயக்கி வரும் குப்பத்து ராஜா படத்தில் மீண்டும் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு மே 1-ந்தேதி முதல் தொடங்குகிறது.

மேலும், இந்த படத்தில் பூனம் பாஜ்வா படம் முழுக்க புடவை கட்டி குடும்பப் பாங்கான வேடத்தில் நடிக்கிறார். கூடவே அழுத்தமான கதாபாத்திரமாம். அதனால் இந்த படத்திற்கு பிறகு தன்மீது நல்ல நடிகை என்கிற முத்திரை விழும் என்று கருதுகிறார் பூனம் பாஜ்வா. அதனால் தன்னைத்தேடி வந்த சில கவர்ச்சிகரமான கேரக்டர்களில் நடிக்க மறுத்து விட்டவர், அடுத்தபடியாக கிளாமர் அல்லாத அழுத்தமான வேடங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப் போவதாக கூறியுள்ளார்.

9821 total views