என்னை வாழவிடுங்கள்… கதறும் மைனா

Report
803Shares

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். கார்த்திக் தற்கொலைக்கு நந்தினி தான் காரணம் என கார்த்திக் பெற்றோர் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

கார்த்திக் தற்கொலைக்கு காரணம் நந்தினியின் நடத்தை, ஆண் நண்பர்கள், பண ஆசை என பல அவதூறுகள் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. கார்த்திக் மரணம் குறித்து மைனா நந்தினி கூறியதாவது நான் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்தது தான் என் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு. வலுகட்டாயமாக நான் அவரை திருமணம் செய்து இருக்க கூடாது.

திருமண வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் இருவரும் சந்தோஷமாக இருந்தோம். கடந்த 3 மாதமாக அவரது அன்பு திடீரென என் மீது குறைய ஆரம்பித்தது. அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.கணவன் மனைவிக்கு இடையே வருவது சாதாரணம் என்று தான் முதலில் நினைத்தேன். நாட்கள் செல்ல செல்ல அது வேற மாதிரி சென்றது.

அதனால் நான் அவரை விலகி இருந்தேன். கார்த்திக் திடீர் மரணம் என் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. அவரது பெற்றோர் என் மீது சுமத்தும் குற்றங்களை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவர்கள் தங்கி இருக்கும் வீட்டிற்கும் அட்வான்ஸ் பணம், வீட்டில் பொருட்கள் என அனைத்தும் என் வருமானத்தில் வந்தவை.

கார்த்திக் இறந்த பிறகு ஒரு பெண்ணாக நான் எல்லா அவமானங்களையும் சந்தித்து விட்டேன். என்னை நடிகையாக பார்க்காமல், உங்கள் வீட்டில் உள்ள ஒரு பெண்ணாக பார்த்து நிம்மதியாக இருக்க விடுங்கள் என்றார்.

29865 total views