ஆணியோ புடுங்க வேண்டாம்… சிம்புவை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்..!

Report
264Shares

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன்.. அசராதவன்.. அடங்காதவன்.. படத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக 3 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்தில் அவர் நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களாக படக்குழு தாய்லாந்தில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். 20 நாட்களாக தங்கியும் வெறும் 2 நாட்கள் மட்டுமே முழுமையான படப்பிடிப்பு நடத்தினார்களாம்.

இதனை கேள்விப்பட்ட பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கோபமடைந்து நீங்க தாய்லாந்தில் ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்… நாங்களே புடுங்கிக்கிறோம்.. எல்லோரும் கிளம்பி உடனடியாக சென்னை திரும்ப வரும்படி கூறிவிட்டாராம்.

மேலும், தாய்லாந்தில் எடுக்க திட்டமிட்டிருந்த காட்சிகளை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் எடுக்க சொல்லி விட்டாராம் தயாரிப்பாளர். இதனால், படக்குழுவினர் என்ன செய்வது எனத் தெரியாமல் அவரிடம் கெஞ்சி வருகிறார்களாம்.. அப்ப வழக்கம் போல் தாய்லாந்து காட்சியை நம்ம சென்னையில் நடத்த போறாங்கப்பா… தலையில் போட்டிருந்த துண்டால், முகத்தைத் துடைத்துக் கொண்டு எல்லாம் திரும்ப வரப்போறாங்களா பாஸ்…

9659 total views