நடிகைகள் இடையே மோதல்..? சரவணா ஸ்டோர் அதிபர் அதிரடி..!

Report
675Shares

சமீப காலமாக சரவணா ஸ்டோர் விளம்பரங்கள் அனைத்திற்கும் அதன் உரிமையாளர் சரவணன் தான் விளம்பர மாடலாக நடித்து வருகிறார்.

பிரபல முன்னணி நடிகைகளான தமன்னா, ஹன்சிகா உடன் விளம்பரங்களில் நடித்து வந்தார் சரவணன்.

இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்க வேல் ஒன்றை காணிக்கையாக செலுத்தினார்.

அதன் பின் செய்தியாளர்களிடம், விரைவில் தான் சினிமாவில் நடிக்க உள்ளதாகவும், தான் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்துக்கு நயன்தாராவுடன்தான் ஜோடி சேருவேன் எனவும் கூறியதாக செய்திகள் வெளியானது.

இவரது விளம்பரங்களை ஏற்கனவே சமூக வலைதளங்களில் கலாய்த்தும், விமர்சித்தும் வந்த நெட்டிசன்கள்,

இவரது சினிமா அறிவிப்பையும் சமூக வலைதளங்களில் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், இவருடன் விளம்பர படங்களில் நடித்த நடிகைகள் ஹீரோயினாக நான்தான் நடிப்பேன், அந்த வாய்ப்பு எனக்குதான் தரவேண்டும் என்று போட்டோ போட்டியும் போட்டனராம்.

இதனையடுத்து தற்போது வெளியான செய்தி அனைத்தும் வெறும் வதந்தி எனவும், சரவணனுக்கு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் இல்லை எனவும், சரவணா ஸ்டோர் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

24374 total views