என்னடா இப்பிடி பன்றீங்களே டா! வைரல் வீடியோவால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

Report
461Shares

அஜித் விஜய் ரசிகர்களில் சிலர் எப்போதுமே சமூக வலைதளங்களில் வார்த்தை மோதல்களில் ஈடுபடுவது நீங்களும் பார்த்து வருத்தப்பட்டிருப்பீர்கள்.

இவ்வளவு ஏன் சிலர் அய்யோ என்று கூட அலறியிருப்பீர்கள். ஆனால் இதில் உண்மையிலேயே பாவம் அஜித் விஜய் என்று தான் சொல்லவேண்டும்.

ஏதோ அவர்கள் இருவரும் இதை கண்டுகொள்ளாததால் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. இந்நிலையில் நேற்று விஜய் பழனி மலை முருகன் கோவிலில் இருப்பது போல ஒரு புகைப்படம் வெளியானது.

பாதி முகத்தை காவி துணியால் கட்டியிருப்பது போல அதில் இருந்தது. விஜய் இப்போது விஜய் 61 படத்தில் இருப்பது போல ஹேர் ஸ்டைல் இருப்பதுபோல இருந்ததால் பலரும் நம்பினர்.

இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவ இப்போது யாரும் எதிர்பாராத நிலையில் அந்த போட்டோவில் இருப்பது விஜய் அண்ணா இல்லை.

அது நான் தான். எப்படி இந்த புகைப்படம் வெளியானது என தெரியவில்லை என கூறியுள்ளது பலரை கடுப்படைய செய்துள்ளது.

15974 total views