நடுவானில் உடைந்த விமானத்தின் கண்ணாடி: பத்திரமாக தரையிறக்கி விமானி சாகசம்

Report
28Shares

சீனாவில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளான விமானத்தை, விமானி பத்திரமாக தரையிறக்கி சாகசம் செய்துள்ளார்.

சீனாவில் ஸ்விட்சுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர்பஸ் A319 எனும் விமானம், சுமார் 35,000 அடி உயரத்தில் சோக்ளிங்கிலிருந்து ஹசா என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக விமானி அறையின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் தலைமை விமானியும், துணை விமானியும் காற்றின் வேகத்தில் நிலை தடுமாறினர்.

இதனைத் தொடர்ந்து, துரிதமாக செயல்பட்ட விமானி ஷுவாங்கியூ எனும் விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

அதன் பின்னர், பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிகளை அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.

Nass_sk

1758 total views