விக்ரம் மகனுடன் கமல் மகளா? ஜோதிகா மகளா?

Report
2320Shares

விக்ரம் மகன் துருவுடன் நடிக்கப் போவது கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனா அல்லது ஜோதிகாவின் மகளாக சில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடித்த ஷ்ரியா ஷர்மாவா என்பது இன்னும் முடிவாகாமல் உள்ளது.

தமிழ் திரையுலகில் தனக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு நடிப்பில் முத்திரை பதித்தவர் விக்ரம். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் இவருக்கு நல்ல முகவரியை பெற்றுக் கொடுத்தன.

தற்போது இவரது மகன் துருவ் நடிக்க வந்துவிட்டார். அவருக்கு துவக்கத்திலேயே நல்ல வாய்ப்பை பெற்றுத் தர விக்ரம் முயற்சித்து வருகிறார்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

அதில்தான் துருவ் அறிமுகமாகிறார். ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் முடிவாகி விட்டனர்.

இயக்குநர், ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. பெரிய இயக்குனர்தான் தன்னுடைய மகனை இயக்க வேண்டும் என்பதில் விக்ரம் குறியாக இருக்கிறாராம்.

இதற்காக இயக்குனரை தேடிக் கொண்டு இருக்கிறார்.மறுபக்கம் துருவுடன் நடிக்க கமலின் இளைய மகள் அக்‌ஷரா மற்றும் சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா ஜோதிகாவுக்கு மகளாக நடித்த ஷ்ரியா ஷர்மாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

இவர்களில் ஒருவருடன் துருவ நடிக்கத் தயாராகி வருகிறார்.

87383 total views