போலீஸாரிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்!

Report
34Shares

நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சிக்கு நாளுக்கு நாள் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் தனது கட்சியின் அலுவலகத்தையும் கொடியையும் சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று திறந்து வைத்தார். இதற்காக

அங்கு சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டிருந்தது. இது கொஞ்சம் சாலையை மறைப்பதாக அமைந்திருந்ததால் போக்குவரத்துக்கு பாதிப்பாக இருந்தது.

இது குறித்த செய்தி வெளியானதால் போக்குவரத்து போலீஸாரிடமும் பொதுமக்களிடமும் இடையூறு ஏற்படுத்தியதற்காக கமல்ஹாசன் மன்னிப்பு கோரினார்.

1866 total views