உலக நாயகன் கமல் ஹாசனுக்கு டெங்கு காய்ச்சலா..?

Report
253Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பிரபலங்கள் மட்டும் புகழ் பெறவில்லை. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் ஹாசனும் பிரபலமானார்.

அவர் அவ்வப்போது சில அரசியல் விமர்சனமும் செய்து அதன் மூலம் மக்களின் ஆதரவை பெற்றுவைத்திருக்கிறார். அவர் அரசியலுக்கு வரவும் வாய்ப்பு உள்ளது என்று மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

மேலும் அவரை பேட்டி காண பல ஊடகங்கள் காத்திருந்தன. ஆனால் எதிர்பாராத விதமாக அவர் வரயியலவில்லை. இதற்காக காரணம் உடனே தெரியவந்தததும் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்தில் கூடினர்.

கமல் ஹாசனுக்கு டெங்கு காய்ச்சல் என சில தகவல்கள் பரவியது. ஆனால் உண்மையில் அவருக்கு நேற்று முன் தினம் இரவு திடீரென காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டது.

மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு வைரஸ் காய்ச்சலாம். மேலும் அவருக்கு தொண்டை புண் ஏற்பட்டுள்ளதால் பேச சிரமப்படுகிறாராம்.

இதனால் மருத்துவர்கள் அவர்கள் ஓய்வு எடுக்க சொல்லியிருக்கிறார்களாம்.

9493 total views