தன்மானம்தான் முக்கியம்! ரஜினியை பார்த்து சொன்ன கமல்

Report
297Shares

ஒரு பிரபல கட்சியின் பத்திரிகை நடத்திய வெற்றி விழாவில் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்றனர்.

கமலுக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் ரஜினி பார்வையாளராக கீழே அமர்ந்திருந்தார்.

அது பற்றி பேசிய கமல், "என்னை வந்து அழைத்தபோது, 'ரஜினி வருகிறாரா?' என்று கேட்டேன். ஆம் என்றதும் 'அவரும் பேசுவாரா?' என்று கேட்டேன். 'இல்லை.. அவர் பார்வையாளராக இருப்பார்' என்று சொன்னார்கள். உடனே நானும் அவருடனேயே கீழே உட்கார்ந்து கொள்கிறேன் என சொன்னேன். ரஜினி கையை பிடித்துகொண்டு இருந்துவிடலாம், எந்த பிரச்சனையில் சிக்கிக்கொள்ள மாட்டேன் என நினைத்தேன்.

பிறகு யோசித்தபோதுதான் புரிந்தது தற்காப்பு முக்கியம் அல்ல தன்மானம்தான் முக்கியம் என்று, அதனால் மேடையில் அமர ஒப்புக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

11229 total views