சூப்பர்ஹிட் இரண்டாம் பாகம் கதையுடன் விஜய்க்காக காத்திருக்கும் இயக்குனர் தரணி

Report
652Shares

இளையதளபதி விஜய் தனது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் கில்லி.

இப்படத்தை இயக்குனர் தரணி இயக்கியிருந்தார். இப்படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் ஒக்கடு படத்தின் தழுவல். இந்நிலையில் அடுத்த மீண்டும் தரணியுடன் குருவி படத்தின் மூலம் இணைந்த விஜய் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

அதன் பிறகு விஜய் ரீமேக் படங்களை நடிப்பதை தவிர்த்து வந்தார், இந்நிலையில் இந்த படம் வெளிவந்து 13 வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் ரசிகர்கள் இந்த படத்தை இன்னும் மறக்கவில்லை என்பது கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிய வந்தது.

இதனையொட்டி இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்று விஜய் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக கேள்வி கேட்டு வருகின்றனர். இயக்குனர் தரணியும் பல பேட்டிகளில் 'கில்லி 2' குறித்து பேசியுள்ளார். இதுகுறித்த தாரணி பேசுகையில் கில்லி 2' ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது. விஜய் எப்போது ஓகே சொன்னாலும் நான் இயக்க தயாராக இருக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

25633 total views